ஆவடியில் காவலரை பணி இடைநீக்கம் செய்ததால் மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் வள்ளிநாயகம், 32 வயதான இவர் 2013இல் காவலராக பணியில் நியமிக்கப்பட்டு திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்து ஐந்தாம் தேதி திருமுல்லைவாயில் காவல் நிலைய ரோந்து வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது முன்பக்க டயர் வெடித்ததினால் சாலை சென்டர் மீடியாவில் வாகனத்தை இடித்ததாக புகார் எழுந்த நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்த காவலர் வள்ளிநாயகம் திருமுல்லைவாயல் சுபாஷ் நகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் போலீசார் காவலரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த வள்ளிநாயகம் திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் இந்நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மற்றும் சக காவலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…