Connect with us

முன்னணி காமெடி நடிகரின் மகன் புகைப்படமா இது? ரொம்ப கியூட்டா இருக்குதே!

images 2022 07 22T135909.404 1

பொழுதுபோக்கு

முன்னணி காமெடி நடிகரின் மகன் புகைப்படமா இது? ரொம்ப கியூட்டா இருக்குதே!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு , முதலில் சிறுசிறு வேடங்களில் வந்த யோகி பாபு மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்து பிசியாக மாறினார், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்ததில் இருந்து பிரபலமடைய ஆரமித்துள்ளார்.

YogiBabu Marriage

இவர் தற்போழுது இந்தியில் அட்லி இயக்கம் ஷாருக்கான் படமான ஜவான் படத்தில் நடித்து வருகிறார், மேலும் தலைவர் ரஜினி 169 படத்தில் நடிக்க ஒப்பந்தப்பமாகியுள்ளார், சுந்தர் . சி யின் காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா படம் ஹீரோவாக யோகிபாபு நடிப்பு மக்கள் மனதில் பதியும் படி அமைந்துள்ளது. அதை தொடர்ந்து அடுத்ததாக நீலம் புரொடெக்சன்ஸ் பா ரஞ்சித் யோகி பாபுவை வைத்து பொம்மை நாயகி படத்தை தயாரித்து வருகிறார்.

maxresdefault 56

தற்போழுது யோகிபாபு நடிப்பில் வெளியாகிய பன்றிக்குட்டி திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது,ஒரு பன்றிக்குட்டியை மையமாக வைத்து ‘பன்னிகுட்டி’ படம் தயாராகிறது. இதில் யோகி பாபு, கருணாகரன் கதாநாயகனாக நடிக்கிறார்கள்.

காமெடி நடிகராக இருந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து கதாநாயகனாக்க மாறிய யோகிபாபுவிற்கு கடந்த 2020ம் ஆண்டு குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி அவர்களுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லாமல் எளிமையாக நடைபெற்றது.

22 62dac12ea64ed

மேலும் இந்த தம்பதியருக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்து உள்ளது. பல மாதங்களாக அக்குழந்தையின் முகத்தை அவர் வெளியிடவில்லை. இந்நிலையில் 2 தினங்களின் முன் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பார்ட்டியில் நடிகை சஞ்சனா கலந்து கொண்டார்.

விஷால் நடிப்பில் வெளியான லத்தி படத்தின் டீசர் இதோ!

அப்பொழுது யோகி பாபுவின் மகனுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். முதன்முதலாக யோகி பாபு மகனின் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top