இந்தியாவிலேயே மிகவும் வலிமையான கட்சியாக உருமாறியுள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த பாரதிய ஜனதா கட்சி 20 ஆண்டுகளுக்கு பின்பு தமிழகத்தில் சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு பாஜகவை சேர்ந்த வேட்பாளர்கள் எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். இவ்வாறு தமிழகத்திலும் மெல்ல மெல்ல உதயமாகி கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை தியாகராயநகரில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசி எறியப்பட்டு உள்ளது.
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மர்ம நபர்கள் 3 பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்துள்ளனர். தமிழக பாஜக தலைமை அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.