8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழும் நபர்.. எட்டும் காதல் திருமணமாம்.. ஷாக்கில் 90ஸ் கிட்ஸ்கள்!

தாய்லாந்தில் 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நபர் குறித்த செய்தி வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது தாய்லாந்தில் டாட்டூ கலைஞராக வேலைபார்க்கும் நபர்தான் சோரூட். இவர் அந்த 8 மனைவிகளையும் வெவ்வேறு காலகட்டங்களில் காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

அதாவது சோரூட் இந்த ஒவ்வொரு பெண்ணைப் பார்த்த முதல் தருணத்திலேயே காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் ஒவ்வொருவராகக் காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

முதல் மனைவியை அவரது நண்பரின் திருமண நிகழ்வில் சந்தித்துள்ளார். இரண்டாவது மனைவியை சந்தைக்குச் சென்றபோது பார்த்து காதலில் விழுந்துள்ளார்.

மூன்றாவது மனைவியை மருத்துவமனை சென்றபோது அங்கு பார்த்து காதலில் விழுந்துள்ளார். நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது என மூன்று மனைவிகளையும் ஃபேஸ்புக்கில் பார்த்து காதலில் விழுந்துள்ளார்.

ஏழாவது மனைவியை கோவிலிலும், எட்டாவது மனைவியை இந்த ஏழு மனைவிகளுடன் அவுட்டிங்க் சென்றபோது பார்த்துக் காதலில் விழுந்துள்ளார்.

எட்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழும் நபர் குறித்த செய்தியால் நெட்டிசன்கள் ஒருபுறம் ஷாக் ஆக, 90ஸ் கிட்ஸ்கள் எங்களுக்கு எல்லாம் ஒரு கல்யாணத்துக்கே பொண்ணு கிடைக்கலன்னு புலம்புகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.