உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஒமைக்ரான். இவை சற்று வேகத்தோடு பரவ தொடங்கியுள்ளது. இதன்விளைவாக மகாராஷ்டிரா குஜராத் தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இருப்பினும் நம் தமிழகத்தில் இந்த நோய் பரவல் வராமலிருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு இந்த ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நைஜீரியா நாட்டில் இருந்து தோஹா வழியாக சென்னைக்கு வந்த 47 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு ஒமைக்ரான் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பெங்களூரு மரபணு பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரி அங்கு நடைபெற்ற சோதனையில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் இவர் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்தி உள்ளதால் பாதிப்பு அதிக அளவில் இருக்காது என்றும் கூறப்படுகிறது, இவரோடு தொடர்பிலிருந்த மற்றவர்களின் மாதிரிகளும் புனே ஹைதராபாத் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இதோடு இந்தியாவில் மொத்தம் 10 மாநிலங்களில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.