நிலச்சரிவிற்கு நிரந்தர தீர்வாகும் நவீன மண் உறுதிபடுத்தும் திட்டம் – நெடுஞ்சாலைத்துறை

குன்னூர் மரப்பாலம் பகுதியில் நிலச்சரிவை தடுக்கும் நவீன மண் உறுதிபடுத்தும் திட்டத்தில் தடுப்பு சுவர் அமைத்த இடத்தில் தற்போது புற்கள் வளர்ந்து காட்சியளிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக நிலச்சரிவு ஏற்படுகிறது. இதில் நெடுஞ்சாலைத் துறையில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என 49 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மண் உறுதிபடுத்தும் திட்டத்தின் கீழ் முதன்முறையாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், நவீன தொழில்நுட்பத்துடன் பசுமை தொழில்நுட்ப முறைகளில் பணிகள் துவங்கப்பட்டது.

இதில், புவியீர்ப்பு கேபியன் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு உள்ளது. மேலும் மண் சரிவை தடுக்கும் வகையில், நங்கூர ஆணியுடன் மெல்லிய கம்பிவலை கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் உட்புகாத வகையில் நவீன தொழில்நுட்ப முறையில், மண்ணரிப்பை தடுக்க மண் ஆணி எனப்படும் ஜியோகிரிட் மூலம் மண் உறுதித்தன்மை ஏற்படுத்தப்பட்டு, புற்கள், தாவரங்களை வளர்க்கும் பணி முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து மற்ற இடங்களில் ஆய்வு மேற்கொள்ள நெடுஞ்சாலை முடிவு செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment