தாசில்தாரை கொல்ல முயற்சி; பிரபல ரவுடிக்கு 5 ஆண்டுகள் சிறை!

அரசு ஊழியரை கொலை செய்ய முயன்ற பிரபல ரவுடிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல ரவுடி சுரேஷ் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு கயத்தாறு தாசில்தார் ஓட்டுனரை தச்சநல்லூர் வாய்க்கால் பாலம் அருகே வழிமறித்து, கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கூடிவிடவே சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ரவுடி சுரேஷை ஆய்வாளர் வனசுந்தர் கைது செய்து எதிரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் திரு. ரஞ்சித் ராஜ் ஆஜராகி வழக்கு நடத்தினார். இவ்வழக்கு விசாரணை முடிந்து திருநெல்வேலி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ரவுடி சுரேஷ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருநெல்வேலி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ் குமார் உத்தரவிட்டார்.

மேலும், அரசு ஊழியரை வழிமறித்து தாக்கிய குற்றத்திற்காக ஒரு வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. பிரபல ரவுடிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால் திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.