அடுத்த ஷாக்!! இந்தியாவில் நுழைந்தது புதிய வகை ‘ BF.7’ கொரோனா..!!

கொரோனாவின் தாயகமான சீனாவில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக BF.7 வகை கொரோனா சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் கிடுகிடுவென பரவி வருகிறது.

இந்நிலையில் BF.7 வகை கொரோனா இந்தியாவிலும் கால் பதித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த 3 மணி நேரம்.. 11 மாவட்டங்களுக்கு அலர்ட் – வானிலை மையம் தகவல்!!

இதனிடையே BF.5-யில் மாறுபாடு BF.7 வைரஸ் எனவும் குறுகிய காலங்களில் அதிகம் பரவும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரிகிறது.

அதே சமயம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே வெளிநாடுகளில் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இனி ஒவ்வொரு வாரமும்! டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு..!!

அதில் முகக்கவசம் அணிதல், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் எனவும், கொரோனா இன்னும் முடிவுக்கு வராததால் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.