தமிழகத்திற்கு என தனி ரயில்வே துறையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்திற்கு என தனி இரயில்வே துறையை அமைக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரயில்வே துறை என்றாலே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்கு தேவையான ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றுக்காக மத்திய அரசை கையேந்தும் நிலை உள்ளது

இந்த நிலையில் தமிழகத்திற்கு என தனி ரயில்வே துறை அமைக்கப்பட்டால் அதன் மூலம் தமிழகத்திற்கு தேவையான வசதிகள் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தமிழகத்தில் புதிய ரயில் பாதை புதிய ரயில் நிலையங்கள் ஆகியவற்றை அமைக்க ரயில்வே துறையை உருவாக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஆலோசனையின் முடிவில் அதிரடி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment