வடகடலோரத்துக்கு ரெட் அலார்ட்! வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த நிலையில் நேற்றைய தினம் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அதன்பின்னர் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது அதற்கு காரணம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகும். இந்த நிலையில் நேற்றைய தினம் கூறியிருந்த அந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வங்கக்கடலில் உருவானதாக கூறப்படுகிறது.

அதன்படி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இவை மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி காலை வட தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வருமென்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை எனினும் வடகடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு அலாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிக கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment