தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த திடீர் பருவ நிலை மாற்றத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மழை மேகங்களில் மிதந்து வரும் புதிய ஆபத்து பற்றி சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆராய்ச்சியில் பல ஆபத்துக்கள் மழை மூலமாக பூமிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, அந்த ஆபத்து என்ன என்பது பற்றியும் அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம் .
கோடை வெயில் கொளுத்தி வரும் இந்த சீசனிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது இந்த சூழலில் சுத்தமான மழையில் குளித்து விளையாட அனைவரும் ஆர்வமாக இருப்பது உண்மைதான்.
ஆனால் மழையோடு சேர்ந்து இதுவரை பார்த்திராத பேராபத்தும் கூடவே பூமிக்கு வருகிறது என்றால் நம்ப முடியாத தகவலாக அமைந்துள்ளது . இந்த மழையில் மருந்துகளுக்கெல்லாம் சற்று மடங்காத பாக்டீரியாக்களை மேகங்கள் சுமந்து உலகமெங்கும் சுற்றித் திரிவதாக அண்மையில் வெளியான ஆய்வு முடிவு அதிர்ச்சி கிளப்புகிறது .
மத்திய பிராஸ்சில் உள்ள செயலிழந்த எரிமலையின் மேல் வளிமண்டல ஆராய்ச்சி மையத்தில் 2019 முதல் 2021 வரை மூன்று ஆண்டுகள் சேகரிக்கப்பட்ட மேக மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன ,இந்த ஆய்வு முடிவுகள் சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்ஸ் என்ற ஆய்வுகளில் வெளியாகியுள்ள நிலையில் மேக நீரில் ஒரு மில்லிலிட்டரில் 330 முதல் 30,000 வரையிலான பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலியில்லாமல் மரண தண்டனையா.. எது என்ன புதுசா இருக்கே!
குறிப்பாக மருந்துகளுக்கு கட்டுப்படாத 29 துணை வகை ஜீன்களை கொண்ட பாக்டீரியாக்களும் இதில் அடக்கம் என்று சொல்லப்பட்டுள்ளது நமது இயற்கை சூழலில் இலைகள் மற்றும் மண்ணில் அதிகம் காணப்படும் இந்த வகை பாக்டீரியாக்கள் காற்றின் வழியே தூக்கிச் செல்லப்பட்டு மேகங்களில் கலந்திருக்க கூறப்படுகிறது.
எனவே இந்த காலநிலை மாற்றத்தால் வரும் மழைகளில் குளித்து விளையாடாமல் எச்சரிக்கையாக இருக்கும் படி தகவல்கள் வெளியாகியுள்ளது.