ஒரு மாதம்! முக்கிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் சாதி, வருவாய் மற்றும் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து இருந்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

அரச மரத்திலிருந்து வெளிவரும் புகை.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!!

இந்த கூட்டத்தில் சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற நிலுவையில் உள்ள சான்றிதழ்களை காலம் தாழ்த்தாமல் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். குறிப்பாக அதன் விவரங்களை தகவல் பலகையில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறினார்.

அதே போல் போக்குவரத்துத் துறையில் பொதுமக்களின் வசதிகளுக்கு ஏற்ப போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனவும், பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறினார்.

அலர்ட்! 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

அதே போல் பட்டா மாற்றுவதில் தாமதங்கள் இன்றி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.