டெல்லியில் குரங்கு அம்மை அறிகுறியுடன் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பா கண்டத்தில் தொடங்கிய குரங்கு அம்மை நோயானது உலகம் முழுவதும் சுமார் 78-க்கு நாடுகளுக்கு மேல் பரவி வருகிறது. இத்தகைய கொடிய வைரசால் 20,000 ஆயிரம் பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியான நிலையில் டெல்லியிலும் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
தற்போது தலைநகர் டெல்லியில் மேலும் 2 பேர் குரங்கு அம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகைய அறிவிப்பால் தலைநகர் முழுவதும் பொது மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பேரும் வெளிநாடுகள் சென்றார்களா? அல்லது வெளிமாநிலங்கள் சென்றார்களா? என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.