உலகத்தை சுற்றிக்கொண்டே வொர்க் ப்ரம் ஹோம்: சொகுசு கப்பலில் செல்லும் இளைஞர்!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை நடைமுறைப் படுத்திய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் நடைமுறைப்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் 24 வயது இளைஞர் ஒருவர் வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணியை கொண்டுள்ள நிலையில் அவர் சொகுசு கப்பலில் உலகத்தைச் சுற்றி கொண்டே தனது வழக்கமான பணியையும் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர் 500 அறைகள் கொண்ட சொகுசு கப்பலில் உள்ள ஒரு அறையை 12 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த அறையின் வாடகை 12 ஆண்டுகளுக்கு 2.4 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறையில் அனைத்து விதமான வசதியும் இருப்பதாகவும் அதே போல் இந்த சொகுசு கப்பலில் மருத்துவர்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம் என அனைத்து வசதிகளும் இருப்பதாகவும் தனது அன்றாட பணியை பார்த்துக் கொண்டே உலகம் முழுவதும் சுற்ற இந்த கப்பல் தனக்கு வசதியாக இருப்பதாகவும் அந்த இளைஞர் பேட்டி அளித்துள்ளார். இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.