#Breaking ரயிலில் செல்போன் பறிக்க முயன்றவரின் கால் துண்டானது… சென்னையில் பயங்கரம்!

சென்னையில் ஓடும் ரயிலில் செல்போன் பறக்க முயன்ற நபரின் கால்கள் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் இருந்த பயணிகளிடம் கொள்ளையன் கைவரிசை காட்ட முயன்றுள்ளான். பென்சில் பேக்டரி அருகே மின்சார ரயில் சென்று கொண்டிருந்த போது, அதிலிருந்த நபர் பயணிகளிடம் இருந்து செல்போன், நகை ஆகியவற்றை பறிக்க முயன்றுள்ளார்.

கொள்ளை முயற்சியில் ரயிலில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நவீன் என்ற 24 வயது கொள்ளையனின் கால் மீது ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் இடதுகால் துண்டானது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த நபர்கள், ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நவீனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அட்டை நவீன் என அழைக்கப்படும் நவீன் மீது இதற்கு முன்னதாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நவீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நவீனின் கூட்டாளியான குடுவை சுரேஷ் என்பவர் கடந்த ஆண்டு கொள்ளையடிக்க முயன்ற போது ஓடும் ரயிலில் அடிபட்டு கால் துண்டானது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment