குடிபோதையில் தலைக்கேறிய காமம்… நண்பரின் 6 வயது மகளை சீரழித்த நபருக்கு அதிரடி தீர்ப்பு!

6 வயது சிறுமியை குடி போதையில் பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு ஆயுள் தண்டனை தஞ்சை போக்சோ நீதிபதி சுந்தர்ராஜன் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளார்.

முத்துப்பேட்டையை சேர்ந்த 49 வயது வேலுச்சாமி 2016ம் ஆண்டு, தனது நண்பரின் வீட்டில் 6 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி 10 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுத்ததையடுத்து வேலுச்சாமி கைது செய்யப்பட்டார்.

தஞ்சை அரசு வழக்கறிஞர் சசிரேகா குற்றத்தை மருத்துவ ஆதாரத்துடன் நிரூபித்ததையடுத்து தஞ்சை போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் குற்றவாளி வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிடவும் உத்தரவிட்டார். குற்றவாளி வேலுச்சாமியை போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.