நம்பர் பிளேட்டால் அடித்த லக்.. லட்சங்களை வாரிக் குவித்த அமெரிக்க நபர்.. இப்படியும் ஒரு நம்பிக்கையா?

அமெரிக்கா : கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்று ஒரு சொலவடை உண்டு. அது ஒருவருக்கு நிஜமாகியுள்ளது. சாதாரணமாகவே குருட்டு நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை என்பதையும் தாண்டி ஒருவித ஜோதிடமாகவே பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஷேர் மார்க்கெட்டில் எப்போதோ போட்ட பணம் இன்று பல மடங்கு சம்பாதித்துக் கொடுக்கும். அதேபோல் திடீரென்று குருட்டு அதிர்ஷ்டமாக ஏதேனும் ஒரு பணவரவு ஏற்படும். மேலும் நம் வீட்டிலும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்று சில வழிபாட்டு முறைகளையும் பின்பற்றுவோம்.

ஒரு போதும் ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது.. இபிஎஸ் அதிரடி..

இப்படி நாட்டுக்கு நாடு, கலாச்சாரத்துக்கு கலாச்சாரம் வேறுபட்டிருக்கும் வேளையில் நம்பிக்கை என்பது மட்டும் உறுதியாக உள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள ஒரு நபர் லாட்டரிச் சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பாராம். ஆனால் அவர் லாட்டரி வாங்குவது எப்படி தெரியுமா? சாலைகளில் செல்லும் வாகனங்களில் எண்களை வைத்து அதேபோன்ற எண்களில் லாட்டரி வாங்குவது வழக்கமாம். இப்படி பல ஆண்டுகளாக எப்போதாவது கடவுள் கண் திறப்பார் என லாட்டரி வாங்கி வாங்கி ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஆனால் பல வருட நம்பிக்கை வீண்போகமால் வழக்கமாக ரோட்டில் பெயர் தெரியாத ஒருவருடைய வாகனத்தின் எண்ணை பயன்படுத்தி லாட்டரி வாங்க காசு பணம் துட்டு மணி என இப்போது இன்ப அதிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். வயதான அந்த நபருக்கு தற்போது வாங்கிய லாட்டரியில் சுமார் 41 லட்சம் பரிசு விழுந்துள்ளது. இந்தப் பணத்தினை தனது பேரக் குழந்தைகளுக்குச் செலவழிக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் துபாய் லாட்டரி வாங்கிய இந்தியர்கள் சிலருக்கு கோடிக்கணக்கில் பரிசு விழுந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews