#Breaking உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; 19ம் தேதி நடக்கப்போவது என்ன?

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலை ஒட்டிய பகுதிகளில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டுள்ளது.

இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாகவும், அதன்பிறகு, அது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் 17 டிசம்பர் வரை அதன் தீவிரத்தை தக்க வைத்து கொள்ளும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு தீவிரமடையும் பட்சத்தில் வருகின்ற 19ம் தேதி தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.