உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! எங்கெல்லாம் மழை?

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வருகின்ற 19-ம் தேதி வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் போன்ற பகுதிகளில் வருகின்ற 20,21-ம் தேதி வரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு கிரீன் சிக்னல்! பாஜக நிர்மலுக்கு ஐகோர்ட் செக்!!

அதன் படி, வருகின்ற 20-ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து 21ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைப்போல் சரியும்தங்கம் விலை: கொண்டாடும் நகை பிரியர்கள்!!

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஒரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment