இருக்கிற விலைவாசியில் இத்தகைய விலை குறைப்பா? ஒரு லிட்டர் ஆயில் 20 ரூபாய் வரை விலை குறைவா!

நாள்தோறும் விலைவாசி கண்ணா பின்னமாக உயர்ந்து கொண்டு வருகிறது. இதனால் மக்கள் உழைக்கும் அனைத்தும் எங்கேயோ கொண்டு கொடுக்கும் அளவிற்கு தான் விலைவாசி காணப்படுகிறது. இது மத்தியில் தற்போது சமையல் எண்ணெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் மற்றும் சன் பிளவர் ஆயில் இன் கலால் வரி  5 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பாமாயில் அடிப்படை கலால் வரி 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேபோல் சுத்திகரிக்கப்பட்ட சோயா மற்றும் சன் பிளவர் ஆயில் அடிப்படை கலால் வரி 32.5 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதமாக குறைந்துள்ளது. சமையல் எண்ணெய்களில் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதால் சந்தைகளில் ஒரு லிட்டர் எண்ணெய் விலை குறைந்துள்ளது.

அதன்படி இந்தியாவில் சில்லரை வணிகத்தில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து சமையல் எண்ணெய் லிட்டருக்கு ரூ 5 முதல் ரூ 20 குறைந்துள்ளது. இதனை மத்திய நுகர்வோர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் சமையல் எண்ணெய் விலை குறைக்கப்பட்டது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment