வெளுத்து வாங்கும் வெயிலில் உடல் வெப்பத்தை குறைக்க சாப்பிட வேண்டிய சில உணவுகளின் லிஸ்ட் இதோ!

வெயில் காலம் வேகம் எடுக்க தொடங்கியதை அடுத்து பலரையும் உடல் சூடு பிரச்சனை வாட்டி வதைத்து வருகிறது. அதிகரிக்கும் உடல் வெப்பநிலையால் உடல் சோர்வு வயிற்று வலி வயிற்றுப்போக்கு அதிக வியர்வை சிறுநீர் பாதையில் எரிச்சல் மற்றும் சருமத்தில் கொப்புளங்கள் ஆகிய பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது போன்ற சிக்கல்களை தவிர்க்க உடல் வெப்பத்தை சமநிலைக்கு கொண்டு வரும் உணவு வகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

அதிக நீர் சத்து மிக்க தர்ப்பூசணி பழம் உடல் சூட்டை தணித்து சரும வறட்சியை போக்கும் நீர்ச்சத்துள்ளது .

நார்ச்சத்தும் நிறைந்துள்ள வெள்ளரிக்காய் உடல் வெப்பத்தை குறைப்பதோடு செரிமான கோளாறுகளுக்கும் தீர்வாக அமைகிறது உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.

முலாம்பழம் ஆனால் முலாம் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால் சளி மற்றும் இருமல் வர வாய்ப்புள்ளது என்பதால் அவற்றை அளவாக சாப்பிட வேண்டும்.

இயற்கை தரும் சுவையான இளநீரை குடிப்பதால் உடல் சூடு கட்டுக்குள் இருப்பதோடு ரத்த சர்க்கரை அளவுகளையும் சீராக வைக்க உதவுகிறது.

நீர் சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள நுங்கை அவ்வப்போது சாப்பிட்டு வர உடலின் வெப்பநிலை சிறப்பாக பராமரிக்கப்படும்.

பனைமரத்திலிருந்து கிடைக்கும் பத நீர் உடல் சூட்டை கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு சத்தையும் அளிக்கிறது.

நீர்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள வெந்தயத்தை அன்றாட சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறப்பான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது.

வெயில் காலத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய நீர்ச்சத்து நிறைந்துள்ள நீராகாரத்தை காலை உணவாக எடுத்துக் கொள்வது சரியான தேர்வாக அமையும்.

அட்சய திருதியையில் விஷ்ணு, மகாலட்சுமிக்கு பிடித்த வெண்பொங்கல் செய்வது எப்படி?!

வெயில் காலத்தில் அவ்வப்போது கம்பங்கூழ் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறைவதோடு உடல் சோர்வு நீங்கி மேம்பட்ட ஆரோக்கியத்தை பெற முடியும் .

இந்த எளிமையான உணவுகளை நாம் கவனத்தில் கொண்டு நாம் சாப்பிட்டு வந்தால் இயற்கையான முறையில் நாம் வீட்டிலே உடல் சூட்டை குறைக்க முடியும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.