மீண்டும் சோகம்!! 55 அடிக்குள் ஊசலாடும் உயிர்.. மீட்கும் பணி தீவிரம்!!

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவனை மீட்கும் பணியானது 2-வது நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதே சமயம் கிணறுகள் வறண்ட அவற்றை மூடாமல் பலர் விடுகின்றனர்.

கடும் மோதல்! டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை!!!

இதன் காரணமாக ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுவது வாடிக்கையான ஒன்றாக அமைகிறது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் மாண்டவி கிராமத்தில் நேற்றைய தினம் 8 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மாலையில் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விழுந்ததாக தெரிகிறது. தற்போது தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது 55 அடி ஆழ கிணற்றில் உள்ளதாக தெரிகிறது. அதே சமயம் 40 அடி தோண்டியுள்ள நிலையில் சிறுவனை மீட்கும் பணியானது சவாலாகவே அமைந்துள்ளது.

கார்த்திகை தீபம்: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

இதனையே அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மீட்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு வருவதாகவும், சிறுவனுக்காக பிரார்த்தனை செய்வதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.