ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது!: ஐகோர்ட் கிளை;

ஒவ்வொரு மாநிலத்திலும் முதன்மை நீதிமன்றமாக காணப்படுவது உயர் நீதிமன்றம். தமிழகத்தில் உயர் நீதிமன்றம் சென்னையில் உள்ளது. இது தென் தமிழக மக்களுக்கு சற்று சிரமமாக இருப்பதால் உயர் நீதிமன்ற கிளை மதுரை மாநகரில் உள்ளது.

ஐகோர்ட் மதுரை

இவ்விரு நீதிமன்றங்களும் தினந்தோறும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும். உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆயுள் தண்டனை குறித்து சில உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமை கோர முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

முன்கூட்டியே விடுதலை என்பது சட்டத்திற்கு உட்பட்ட அரசின் முடிவை சேர்ந்தது, அதை யாரும் உரிமை கோர முடியாது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. ஆயுள் தண்டனை என்பது ஒருவரின் ஆயுள் காலத்திற்கானது எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.

கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது பற்றி அரசு விதிக்கு உட்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறினார். இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி மூர்த்தியை விடுவிக்க கோரிய மனைவி மாரியம்மாள் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment