நள்ளிரவில் ஊருக்குள் வலம் வரும் சிறுத்தை; பீதியில் கிராம மக்கள்!

உதகை அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில் தொடர்ந்து நள்ளிரவில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வரும் ஒற்றை சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கும் சிறுத்தைகள் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு வந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

குறிப்பாக உதகை அருகே உள்ள கல்லக்கொரை, பாலாடா, கேகே நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரியும் ஒற்றை சிறுத்தை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று வளர்ப்பு நாய்களை வேட்டையாட முயன்று வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் அந்த சிறுத்தையை கண்காணித்து பிடிக்காமல் அலட்சியமாக இருப்பதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.