என்னங்க சொல்றீங்க ஒரு கிலோ தேயிலை ஒரு லட்சம் ரூபாயா? கேட்டாலே தலை சுத்துதே…..!

சாப்பாட்டிற்கு அடுத்தபடியாக நம்ம மக்கள் லிஸ்ட்ல இருக்குற ஒரு பானம் என்றால் அது டீ காபி தான். குளிர்பானங்கள் எந்த அளவிற்கு பிடிக்குமோ அதே அளவிற்கு டீ காபி பிரியர்களும் இருக்க தான் செய்கிறார்கள். சிலர் டீ காபி இல்லாமல் இருக்கவே மாட்டேன் என கூறுபவர்களும் உள்ளார்கள்.

தேயிலை

அந்த அளவிற்கு டீ காபி நம் வாழ்க்கையோடு ஒன்றாகி விட்டது. டீ காபி போன்றவற்றை தேயிலை கொண்டு தயார் செய்வார்கள். சாதாரணமாக ஒரு கிலோ தேயிலை எவ்வளவு இருக்கும். நாமாகவே தோராயமாக நினைத்தாலும் நம்மால் நினைத்து பார்கக் முடியாத அளவிற்கு அசாமில் ஒரு கிலோ தேயிலை விற்பனை ஆகியுள்ளது.

ஆமாங்க அசாமில் ஒரு கிலோ தேயிலை தூள் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது. அங்குள்ள மனோகரி தேயிலை தோட்டத்தில் விளைவிக்கப்பட்டு பாரம்பரிய முறையில் கையால் தயாரிக்கப்பட்ட ஒரு கிலோ மனோகரி கோல்ட் தேயிலைத் தூள் திப்ரூகாரில் உள்ள தேயிலை விற்பனை மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட தேயிலை என்பதால் இதற்கு கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் கடும் போட்டிக்கு இடையே அந்த தேயிலைத் தூள் சுமார் 99 ஆயிரத்து 999 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 2020 ஆம் ஆண்டு இதே தேயிலைத் தூள் ஒரு கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மழைக்காலம் என்பதால் காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை உச்சத்தில் உள்ளது. இவற்றை வாங்கவே நம் மக்கள் போராடி வருகிளார்கள். இந்நிலையில் வெறும் ஒரு கிலோ தேயிலை தூளை ஒரு லட்சம் கொடுத்து வாங்கியுள்ள சம்பவமும் நம் நாட்டில் தான் நடந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment