Connect with us

ஒரு கிலோ ஸ்வீட் ரூ.9000: தங்கம் கலந்ததா?

News

ஒரு கிலோ ஸ்வீட் ரூ.9000: தங்கம் கலந்ததா?

057b5e927b4986b8c41cab225df9f1b4

இந்தியா முழுவதும் பெருநகரங்களில் ஒரு கிலோ ஸ்வீட் 500 முதல் 1000 வரை விற்பனையாகி கொண்டிருக்கும் நிலையில் ஒரு கிலோ ஸ்வீட்டின் விலை ரூபாய் 9 ஆயிரம் என குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கடை ஒன்றில் விற்பனை செய்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குஜராத்தில் தற்போது ரக்ஷாபந்தன் மற்றும் ஜென்மாஷ்டமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் ரூபாய் 9 ஆயிரத்திற்கு விற்கப்படும் ஸ்பெஷல் ஸ்வீட் அனைவரையும் கவர்ந்துள்ளது

தங்கத்தை மெல்லிய இழைகளாக மாற்றி தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்வீட்டை வாங்குவதற்கு பொது மக்கள் முண்டியடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஸ்வீட் தங்கம் கலக்காமலும் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அந்த ஸ்ர்வீட் ரூ.600 முதல் 800 வரை விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

தங்கம் வெள்ளி ஆகியவை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஸ்வீட்டை 9 ஆயிரம் கொடுத்து வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஸ்வீட்டின் அருமையை அறிந்த பலர் ஆன்-லைன் மூலம் ஆர்டர் செய்து வருவதாகவும் அவர்களுக்கு டோர் டெலிவரி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளன. இது குறித்த செய்தி ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top