எம்மாடியோ! ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.5000-க்கு விற்பனை!!

ஆண்டிப்பட்டியில் மல்லிகைப்பூவின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.5000க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி முழுவதும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரின் பூக்கள் விலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் பனிப் பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

மீண்டும் சோகம்!! சென்னையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

இந்த சூழலில் நேற்று 3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ ஆனது இன்றைய தினத்தில் 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது வரலாறு காணாத விலை ஏற்றமாக பார்க்கப்படுகிறது.

அதே போல் பிச்சி பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லைப்பூ ரூ.2 ஆயிரம், கனகாம்பரம் கிலோ 2 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கழிவறையை சுத்தம் செய்த தலித் மாணவர்கள்: தலைமையாசிரியர் கைது!!

இத்தகைய விலையேற்றத்தினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், வரும் காலங்களில் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.