எம்மாடியோ!! ஒரு கிலோ மல்லிப்பூ 2800 ரூபாயா?

ஈரோட்டில் பனி பொழிவின் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக மல்லிகை, முல்லை, சம்மங்கி உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

சென்னையில் பரபரப்பு!! அரசு பேருந்தை வழிமறித்த கல்லூரி மாணவர்கள்..!!!

இங்கு கொள்முதல் செய்யப்படும் பூக்களானது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சூழலில் சில தினங்களாக ஒரு கிலோ மல்லிகைப்பூ 1000 முதல் 1600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையில் தொடர்மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,800-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி பள்ளி வழக்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!!

அதே போல் முல்லை ரூ.1500, காக்கடா ரூ.600, செண்டு மல்லி ரூ.900, ஜாதிமல்லி ரூ.600, கனகாம்பரம் ரூ.500, அரளி ரூ.160, துளசி ரூ.40 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.