நெருங்கும் ஆயுத பூஜை: ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500-க்கு விற்பனை..!!!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலையானது மளமளவென சரிய தொடங்கியது. குறிப்பாக பூக்களின் தேவையானது குறைந்து காணப்படுவதால் விலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலையானது தாறுமாறாக அதிகரித்து காணப்படுகிறது.

அதன் படி, ஒரு கிலோ மல்லிகை பூ ரூ. 1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பட்டன் ரோஸ் ரூ. 250-க்கும் சம்பங்கி ரூ. 300-க்கும் விற்பனையாகின்றன.

இதனை தொடர்ந்து ஆத்தூர் போன்ற பகுதிகளில் 1 கிலோ செண்டுமல்லி பூக்களின் விலையானது ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.