
Entertainment
ஏ.கே. 61 படப்பிடிப்பில் மஞ்சுவாரியார்! வெளியான மாஸ் தகவல்
அஜித் வினோத் கூட்டணியில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை.வலிமை படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
இதை தொடர்ந்து அஜீத் மற்றும் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கியது.வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையாஉழைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித்.ஏ கே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் வீரா,அஜித்துடன் பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக மட்டுமே தகவல் வந்துள்ளது.இந்த படத்தில் அஜித் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் கதைக்களம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.
தற்போது படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளது அடுத்தவாரம் புனேவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், நடிகை மஞ்சுவாரியார் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
தன் வேலையை தொடங்கிய ஐஸ்வர்யா ரஜினி! 12 வருடங்களுக்கு பின் come back!
ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் படப்பிடிப்பு முழுவதையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது
