News
ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது துப்பாக்கிச்சூடு: பெரும் பரபரப்பு

டெல்லியில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மெஹ்ராலி என்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எம்எல்ஏ நரேஷ் யாதவ்வுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றாலும் அவரது கட்சித் தொண்டர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
டெல்லி முழுவதும் நேற்று ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்த போது திடீரென நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
