Connect with us

‘காலா’ படத்தை கேலி செய்த நாம் தமிழர் தொண்டர்களுக்கு அடி உதை

Entertainment

‘காலா’ படத்தை கேலி செய்த நாம் தமிழர் தொண்டர்களுக்கு அடி உதை

0db6b7d1164d9a475474fc93d1616cc5

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 1800க்கும் திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி நல்ல ரிசல்ட்டை பெற்றுள்ளது.

இந்த படத்தை பார்த்த ரஜினியை பிடிக்காதவர்கள் கூட பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேடு அருகே உள்ள ஒரு திரையரங்க வளாகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் நேற்று காலா திரையிடப்பட்டது.

9d42f9e97790fe39c4b26041e098979dஇந்த படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் ரஜினி பேசிய ஒவ்வொரு வசனத்தையும் கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். இதனை அந்த தியேட்டரின் உரிமையாளரும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் இடைவேளையின்போது வெளியே வந்த அந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களை ரஜினி ரசிகர்கள் சரியான கவனிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் உடனே அந்த இடத்திற்கு இரு தரப்பினர்களையும் சமாதானப்படுத்தினர். இடைவேளைக்கு பின்னர் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் படம் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top