Entertainment
இன்னும் 13 நாளில் நல்ல செய்தி: ஜெயம் ரவி ரசிகர்கள் குஷி!

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’, லக்ஷ்மண் இயக்கும் பூமி மற்றும் ஜனகனமன’ ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார்

இதில் ’பூமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், லாக்டவுன் முடிவுக்கு வந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் ‘பூமி’ படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ள படக்குழுவினர் இன்னும் 13 நாட்களில் இந்த படம் குறித்த ஒரு நல்ல செய்தியை கூறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். பூமி படமும் ஓடிடியில் ரிலீசா அல்லது வேறு ஏதேனும் நல்ல செய்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இன்னும் 13 நாட்களில் அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி ஜெயம் ரவியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவி ஜோடியாக நிதிஅகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உருவாகியுள்ள இந்த படத்தை லக்ஷ்மண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
