பெற்ற குழந்தையை கொன்ற சிறுமி: திருப்பூரில் பரபரப்பு..!!

திருப்பூரில் பெற்ற குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் இருக்கும் 17-வயது சிறுமி அனிதா என்பவருக்கு அதே பகுதியை சேர்த்த மோகன்ராஜ் (வயது 22) பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காதலாக மாறியதை அடுத்து அனிதா கர்ப்பம் அடைந்தார். இதனால் பெற்றோர் அழித்த புகாரின் பேரில் மோகன்ரஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

வாத்து பண்ணையில் 5 சிறுமிகளுக்கு வன்கொடுமை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

அதே சமயம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையில் குழந்தை கடந்த 19-ம் தேதி அண்டாவில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக சிறுமி கூறியுள்ளார். இருப்பினும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

மக்களே அலர்ட்! டிச.25ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

தற்போது சிறுமி அனிதா மற்றும் மோகன்ரஜை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.