ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி; பொங்கலுக்கு 20 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!

தை 1ம் தேதி நம் தமிழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடி மகிழ்வர். பொங்கல் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டிற்கு வெளியே பொங்க பானையில் பொங்கல் வைத்து பொங்கலிட்டு மகிழ்ந்தார்.

பரிசு தொகுப்பு

இதற்காக தமிழக அரசும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கும். அதன் வரிசையில் தற்போது தமிழக அரசு பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அறிவித்துள்ளது.

அதன்படி தைப்பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பச்சரிசி, வெல்லம்,முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்டவை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2.15 கோடி குடும்பங்களுக்கு ரூபாய் 88 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம்,புளி உள்ளிட்டவையும் அடங்கும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment