தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று இருக்குமோ? சந்தேகத்தை கிளப்பும் ஜீன் மாறுபாடு!

ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது உலகமே அச்சத்தில் உள்ளது. ஏனென்றால் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தோன்றி இன்று உலகில் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான். உலகத்திலுள்ள பல நாடுகளிலும் ஒமைக்ரான் கண்டறியப்பட்டு வருகிறது.

நம் இந்தியாவிலும் கூட இந்த ஒமைக்ரான் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இருப்பினும் நம் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான்ன் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தினம்தோறும் சுகாதாரத்துறையினரால் அறிவிப்பு வெளியாகி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர் நைஜீரியா நாட்டில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி நைஜீரியாவில் இருந்து சென்னை வந்தவர்க்கும், அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேருக்கும் ஜீன் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஜீன் மாறுபடும் ஒமைக்ரான்  தொற்றாக இருக்குமோ என்ற சந்தேகம் தமிழகத்தில் எழுந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment