Connect with us

மாணவியின் சொந்த ஊரில் தயாராகும் மயானம்: காத்திருக்கும் பொதுமக்கள்!!!

22 62d66a8367936

தமிழகம்

மாணவியின் சொந்த ஊரில் தயாராகும் மயானம்: காத்திருக்கும் பொதுமக்கள்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பள்ளி மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே மாணவியின் உடலை வாங்க அவர்களுடைய பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்றைய தினத்தில் இறுதிச் சடங்கை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வாகனங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மாணவி ஸ்ரீமதியின் சொந்த ஊரில் மயானம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்று மாலை மாணவியின் உடல் அவரது சொந்த ஊரை வந்தடையும் என கூறப்பட்டுள்ள நிலையில் நாளை வந்தடையும் என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top