Connect with us

தமிழகத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாம், முதல்வர் அசத்தல்

MK.Stalin

தமிழகம்

தமிழகத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாம், முதல்வர் அசத்தல்

தமிழகத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமை நாளை முதல்வர் திறந்து வைக்க உள்ளார் பணிகள் குறித்து 3 அமைச்சர்கள் நேரில் ஆய்வு.

தமிழகத்தின் முதல்முறையாக இலங்கை  தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி  திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனுத்தில் ரூ 17 கோடியே 17 லட்சம் செலவில் கடந்த 8 மாதத்தில் 321 தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

மறுவாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை 14.09.22 நேரில் திறந்து வைக்க உள்ளார். இந்த மறுவாழ்வு முகாமில் கூடுதலாக  குடிநீர், அங்கன்வாடி மையம், நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, குளியலறை, சமுதாயக்கூடம், பூங்கா, மைதானம், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது. மறுவாழ்வு மையத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

திறப்பு விழாவிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை இன்று 13.09.22 தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ . பெரியசாமி, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர்  பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்டிருந்தனர் மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், பயனாளிகளின் வீடு ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர் அப்பொழுது இலங்கை தமிழர் பெண் ஒருவர் அமைச்சர்களிடம் கூறுகையில் :- இங்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்றும் தங்களது சொந்த வீடாகவே கருதுவதாகவும்  இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி என தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top