நாளைய தினம் நம் தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக ஒவ்வொரு தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் நாளையதினம் வணிக வளாகங்கள், இறைச்சிக் கடைகள் என அனைத்திற்கும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் ரயில் போக்குவரத்து இருக்குமா? என்ற என்ற குழப்பம் இருந்தது. அதற்கு நேற்றைய தினம் தெற்கு ரயில்வே தக்க பதிலை அளித்துள்ளது. அதன்படி சென்னையில் புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று கூறியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் பயணம் மேற்கொள்ளவும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியிருந்தது.
இந்த சூழலில் 10ஆம் தேதி முதல் புறநகர் ரயிலில் பயணிக்க தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . அதன்படி இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டும்தான் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
மாஸ்க் அணியாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் கட்டாயம் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஜனவரி 10ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. UTC செயலி வழியாக 31-ஆம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் முன் பதிவு செய்யப்பட முடியாது என்றும் கூறியுள்ளது.