மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவர் நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களே நான்கு படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி மாமனிதன் உள்பட ஒருசில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் நீண்ட மாதங்களாக கிடப்பில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு படத்தை வெளியிட விஜய்சேதுபதி திட்டமிட்டுள்ளதாகவும் குறைந்தபட்சம் 12 திரைப்படங்கள் இந்த ஆண்டு விஜய் சேதுபதி படங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்களை ஒப்புக்கொண்டு இருப்பதால் வரும் ஆண்டுகளிலும் அவரது படங்கள் அதிகமாக ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது
இதனையடுத்து விஜய்சேதுபதி தமிழ் திரையுலகில் அஜித், விஜய்யை விட அதிகமான திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது