Connect with us

கல்லூரி மாணவியை ‘கதாநாயகியாக்கிறேன்’ என்று பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளர்…!

sexual assault

தமிழகம்

கல்லூரி மாணவியை ‘கதாநாயகியாக்கிறேன்’ என்று பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளர்…!

பொள்ளாச்சியில் சினிமா தயாரிப்பதாக தெரிவித்து பாலியல் தொல்லை தலைமறைவான நபரை தேடும் தனிப்படை போலிஸார் சினிமா பட வாய்ப்பு என்ற பெயரில் பெண்களை ஏமாற்றியதாக புகார் பெண்கள் காவல் காவல்துறையில் பரபரப்பு புகார்

பெண்களை ஏமாற்றி நகை பறிக்கும் அந்த வாலிபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கோரிக்கை கதறிய பெண்களின் புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிய மகளீர் போலிஸுக்கு உத்தரவு பொள்ளாச்சி மகிளா காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து தலைமறைவான நபர் பிடிக்க போலிஸ் நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள காவல் கண்காணிப்பாளர்  அலுவலகம் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். நான் எனது 17 வயதில் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பேஸ்புக்கில் புதிய சினிமா படத்துக்கு கதாநாயகி தேர்வு நடப்பதாக கூறி அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அந்த அறிவிப்பு வெளியிட்டவரை தொடர்பு கொண்டேன். அதற்கு அந்த நபர் பொள்ளாச்சிக்கு வருமாறும், அங்கு தான் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் தெரிவித்தார். அதனை நம்பி நான் பொள்ளாச்சியில் அவர் சொன்ன இடத்துக்கு சென்றேன். அங்கு கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இருந்தார். அவருடன் மேலும் சிலர் இருந்தனர். சிறிது நேரம் சினிமா தொடர்பாக அவர்கள் என்னிடம் பேசினர்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.  நானும் அந்த வாலிபரும் மட்டும் தனியாக அங்கு இருந்தோம். அப்போது எனக்கு அந்த வாலிபர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். நான் குளிர்பானம் குடித்ததும் மயங்கி விட்டேன். அதனை பயன்படுத்திக் கொண்ட வாலிபர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் காலை நான் விழித்தெழுந்து பார்த்தபோது நான் பலாத்காரம் ர்செய்யப்பட்டதை உணர்ந்தேன். இதனால் அந்த வாலிபரை நான் கண்டித்தேன், கண்ணீர் சிந்தித்தேன்.

உடனே அந்த வாலிபர் நான் தான் இந்த படத்துக்கு தயாரிப்பாளர். உன்னை கதாநாயகி ஆக்குவதோடு மட்டுமல்லாமல் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தை கூறினார். அதனையும் நான் உண்மை என நம்பினேன். பின்னர் அடிக்கடி சினிமா டிஸ்கஷன் என்று என்னை பொள்ளாச்சிக்கு அழைத்தார். அப்படி பொள்ளாச்சிக்கு வரும்போது என்னை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

என்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிடிவாதம் பிடித்தேன். அப்போது கொரோனா நேரமாக இருந்ததால் ஆன்லைன் மூலம் பதிவு செய்து என்னை அவர் திருமணம் செய்தார். நாங்கள் கோவையில் வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போது தான் எனக்கு அந்த வாலிபர் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் வந்தது.

அதுபற்றி அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. என்னை ஊரறிய திருமணம் செய்து கொள் என்று சொன்னபோது என்னை விட்டு விட்டு அவர் தலைமறைவானார். கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அதனை ஒரு பெண் எடுத்து பேசினார். எனது கணவரிடம் உனக்கு என்னடி பேச்சு என கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன்மூலம் என்னை ஏமாற்றிய வாலிபர் மேலும் பல பெண்களை ஏமாற்றிய விவரம் உறுதியானது.

என்னை ஏமாற்றிய கரூர் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியிருந்தார். இதே போல கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த 31 வயது பெண்ணும் வந்திருந்தார். அவரும் கரூர் வாலிபரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அவரும் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் மற்றொரு மனு கொடுத்தார். அதில் நான் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன்.

அப்போது எனது திருமணத்துக்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தேன். அதனை பார்த்து கரூர் வாலிபர் என்னை தொடர்பு கொண்டார். மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றுவதாக ஏமாற்றி 2020-ம் ஆண்டு என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். 42 பவுன் நகை மற்றும் பணம் வரதட்சணை கொடுத்து எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.  வேடப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தோம்.

அப்போது மத்திய அரசு வேலை போய் விட்டதாகவும், தற்போது கடனை அடைக்க பணம் வேண்டும் என்றும் கேட்டார். ஒரு நாள் தூக்கில் தொங்குவது போல் நடித்தார். உடனே நாங்கள் சமாதானப்படுத்தி ரூ.15 லட்சம் பணம் புரட்டிக் கொடுத்தோம். அதன்பிறகு வங்கி பணிக்கு செல்வதாக கூறி எனது நகைகளை வாங்கி விற்றார். இதுபற்றி கேட்டபோது என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். மேலும் நாங்கள் 2 பேரும் தனிமையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்டர்நெட்டில் பரப்பி விடுவதாக கூறி மிரட்டினார்.

இந்த விவகாரம் போலீஸ்நிலையம் வரை சென்றது. அதன்பிறகு என்னை விட்டுச் சென்றவர் திரும்பி வரவே இல்லை. இந்தநிலையில் என்னை போல் 10-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றிய விவரம் எனக்கு தெரிந்தது. திருவாரூர் கல்லூரி மாணவி ஒருவரும் அவரால் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். 2 பேரும் புகார் செய்வதற்காக வந்தோம்.

எங்களை போன்ற பெண்களை ஏமாற்றி நகை பறிக்கும் அந்த வாலிபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். டி என் 41 என்ற தலைப்பிலே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து படம் எடுப்பதாக பெண்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. போலீஸாரிடம் புகார் மனு தந்துவிட்டு பெண்கள் கதறிய நிலையில் சம்பத்தப்பட்ட நபரை போலிஸ் கைது உரிய விசாரணை நடத்த வேண்டும் என போலிஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

கதறிய பெண்களின் புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வழக்கு பதிய மகளீர் போலிஸுக்கு உத்தரவிட்ட நிலையிலே பொள்ளாச்சி மகிளா காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து தலைமறைவான நபர் பிடிக்க போலிஸ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நம்மிடையே பேசிய காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கின்றார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top