Connect with us

‘சொந்தக்காசில் சூனியம்’… திருடனுக்கு வைத்த பொறியில் சிக்கி பெண் துப்புரவு பணியாளர் மரணம்!

156511 death1

தமிழகம்

‘சொந்தக்காசில் சூனியம்’… திருடனுக்கு வைத்த பொறியில் சிக்கி பெண் துப்புரவு பணியாளர் மரணம்!

சீர்காழியில் திருடனுக்கு பயந்து பீரோவில் மின்சாரம் கொடுத்த, தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஈசானிய தெருவை சேர்ந்த அன்பழகி 68 இவர் சீர்காழி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார், அன்பழகி தனியாக வசித்து வருகிறார் இவர் வீட்டில் வைத்துள்ள பீரோவிற்கு மின்சாரம் கொடுத்து இரவில் தூங்குவது வழக்கமாக கொண்டிருந்தார்

இந்நிலையில் இன்று காலை எழுந்த அன்பழகி எழுந்து மின் இணைப்பை நிறுத்தாமல் எப்போதும் போல இருந்துள்ளார் வீட்டு வாசலில் கோலமிட்டு பின்னர் வீட்டில் உள்ளே பீரோவுக்கும் அடியில் கோலமாவை வைப்பதற்காக கையை பீரோவில் அடியை விட்ட போது

பீரோவில் மின்சாரம் பாய்ந்தது அறியாமல் அன்பழகி ஈர கையோடு மின்சாரம் பட்டதால் அன்பழகி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

மேலும் திருடனுக்கு பயந்து மின்சாரம் வைத்த பெண் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சீர்காழி பராமரிப்பு ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top