அன்னப்பூரணிக்கான விரதத்தினை இருக்கும் முறை!!

dc4ced56aaa4e0677cd830590ef4b2d0

அன்னப் பூரணி தேவியின் வரம் கிடைத்தால், வீட்டில் உள்ள பசிப் பிணி போன்றவை காணாமல் போகும், இதனால் வீட்டில் உள்ள வறுமை காணாமல் போக வேண்டுவோர், பசி, வறுமை காணாமல் போக வேண்டுவோர், அன்னபூரணி தேவியின் அனுகூலத்தை நிச்சயம் பெறுதல் வேண்டும்.

அதாவது அன்னப் பூரணியின் அனுகூலத்தைப் பெற நினைப்போர் எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் என்று பார்க்கலாம். அன்னபூரணி தேவிக்கான விரதம் இருப்போர், அனைத்து மாதங்களிலும் வளர்பிறை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செய்து வர வேண்டும்.

அதாவது காலையில் எழுந்து குளித்து வீட்டினை சுத்தம் செய்தல் வேண்டும், மேலும் பூஜை அறையினை சுத்தம் செய்து, சாமிப் புகைப்படங்களை புதுத் துணி கொண்டு துடைத்தல் வேண்டும், மேலும் மணல் பலகை ஒன்றினை வைத்து அதன் மீது வெள்ளை துணியை போட்டு விரிக்கவும்.

அடுத்து பாத்திரத்தில் அரிசி மற்றும் பூக்கள், பழங்கள் மற்றும் இனிப்பு வகைகள், சுண்டல், இனிப்பு பொங்கல் மற்றும் பாயாசம், கற்கண்டு, வெற்றிலை, பாக்கு வைத்து சாம்பிராணியைத் தூபம் காட்டுதல் வேண்டும், மேலும் கற்பூரம் காட்ட வேண்டும்.

மேலும் படைத்த நைவேத்தியங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews