Connect with us

வேகமாக நிரம்பும் புழல் ஏரி!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டுமோ?

puzhal aeri red hills lake chennaientry fee timings holidays reviews header

தமிழகம்

வேகமாக நிரம்பும் புழல் ஏரி!! முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டுமோ?

மீண்டும் இன்றைய தினம் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் வரத்தானது சற்று அதிகரித்துள்ளதாக காணப்படுகிறது. ஏனென்றால் முதலில் மேட்டூர் அணையில் நீர்வரத்து ஆனது முப்பதாயிரம் கன அடியில் இருந்து ஒரே நாளில் 40 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டுள்ளது.

இவ்வாறு உள்ள நிலையில் தற்போது புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி புழல் ஏரியில் நேற்று 230 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 250 கன அடியாக அதிகரித்துள்ளது.

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டுள்ள புழல் ஏரியில் தற்போதைய நீர் இருப்பு 2978 மில்லியன் கன அடியாக உள்ளது. இதனால் சென்னை குடிநீருக்காக புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 158 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கும் ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top