சினிமாவில் கதாநாயகியாக நீடிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதிலும் பல இன்னல்களை கடந்து முன்னணியில் இருப்பது அரிதிலும் அரிது.
அந்த வகையில் சுமார் 20 ஆண்டுகளை கடந்தும் கோலிவுட்டில் இளவரசியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. மாடெல்லிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு “மிஸ் சென்னை” என்ற பட்டம் வென்று புகழ்பெற்றார்.
பின்னர் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான “லேசா லேசா” என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.
அதோடு மளமளவென பாலிவுட்டிலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இருப்பினும் தொடர் தோல்வி என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனால் திரிஷா திரைப்பயணம் காலி என ரசிகர்கள் எண்ணினர். அப்போது 96 படத்தில் ஜானுவாகவும், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக வாய்ப்பு கிடைக்க மீண்டும் உச்சநிலையை தொட்டார்.
அதே சமயம் திரிஷாவின் மார்கெட்டும் எகிறியது. தற்போது 20 ஆண்டுகள் கடந்தும் குறையாக அழகுடன் திகழ்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.