ஆவின் பால் பாக்கெட்டில் செத்து மிதந்த ஈ: பொதுமக்கள் அதிர்ச்சி!!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக பால் விளங்குகிறது. இந்நிலையில் ஆவின் பால் பாக்கெட் ஒன்றில் ஈ ஒன்று இறந்து கிடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் ஆவின் நிறுவனம் சார்பில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிடைகள் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆரப்பாளையம் அடுத்த கீழமாத்துார் போன்ற பகுதிகளில் டெப்போக்களில் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

அங்கு பெண் நுகர்வோர் ஒருவர் அரை லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டை வாங்கினார். அப்போது ஈ ஒன்று இறந்து மிதந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடை பெண் டெப்போக்களில் ஒப்படைத்தாக கூறப்படுகிறது.

பின்னர் இத்தகைய தகவல் அதிகாரிகளுக்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட பாக்கெட் குறித்த வீடியோ, போட்டோக்களை இணையத்தில் வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில் ஆவின் பால் பாக்கெட்டில் செத்து மிதந்த ஈ-யின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இதற்கு நுகர்வோர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.