இல்லத்தரசிகள் ஒரே குஷி; இனி 337 ரூபாய்க்கெல்லாம் சிலிண்டர் கிடைக்கும்!

நம் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை அடுத்து மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படுவது சமையல் எரிவாயுவின் விலை உயர்வு.ஏனென்றால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சமையல் எரிவாயு விலை அதிகளவில் விற்கப்படுகிறது.

gas cylinder 00

இதனால் ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சமையல் எரிவாயுவின் விலை உயர்வு கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மக்களின் துயரம் போக்க இந்தியன் ஆயில் நிறுவனம் மினி சிலிண்டரை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

நாம் பொதுவாக பயன்படுத்தும் சிலிண்டர் 19 கிலோ எடையுடன் காணப்படும்.சராசரியாக 19 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை 900 ரூபாய் விற்பனை செய்யபடுகிறது. ஏழை, எளிய மக்களின் துயரைப் போக்கும் வகையில் நூற்றி முப்பத்தி ஏழு ரூபாய்க்கு மினி சிலிண்டர் அறிமுகம் செய்ய உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் பதிவு செய்பவர்கள் தங்களுக்கு தேவையான அளவில் சிலிண்டரை பதிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது.இதன் மூலம் நூற்றி முப்பத்தி ஏழு ரூபாய்க்கு பலரும் மினி எரிவாயு சிலிண்டரை பதிவு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment