வளைகாப்பு நடத்த சொன்ன 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கொடூர கணவன்

விருத்தாசலத்தில் வளைகாப்பு விழா நடத்த சொன்ன 7 மாத கர்ப்பிணி காதல் மனைவியை அடித்து கொலை செய்த காதல் கணவன் கைது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் (வயது 20) இவர் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும் வீரட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகள் சக்தி (வயது 17) இவர் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்துள்ளது இந்த நிலையில் இவர்கள் பெற்றோர்கள் எதிர்த்தும் இரண்டு பேரும் வீட்டிற்கு தெரியாமல் ஓடி போய் திருமணம் செய்துள்ளனர் பின்னர் இரு குடும்பத்தினரும் இரண்டு பேரையும் ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் அற்புதராஜ் மற்றும் அவரது மனைவி சக்தி இரண்டு பேரும் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள சக்தியின் தாய் லதா வீட்டில் மூன்று பேரும் வசித்து வந்தனர். லதா தினமும் கூலி வேலைக்கு சென்று விடுவார் இந்த நிலையில் இன்று லதா வழக்கம் போல் காலை கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது வீட்டில் அற்புதராஜ், சக்தியும் இருந்தனர் சக்தி தனக்கு வளைகாப்பு விழா நடத்த கோரி அற்புதராஜிடம் வற்புறுத்தியுள்ளார் அற்புதராஜ் வளையகாப்பு நடத்த முடியாது என்று மருத்துள்ளார் இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது கோபமடைந்த அற்புதராஜ் வீட்டில் இருந்த ஜல்லி கரண்டியால் சக்தியை சரமாரியா தாக்கி கழுத்தை நெறித்துள்ளார் இதில் சக்தி துடிதுடித்து இறந்துள்ளார் பின்னர் அங்கிருந்து அற்புதராஜ் எதுவும் நடக்காதது போல் காய்கறி மார்க்கெட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

லதா கூலி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது கதவுகள் திறந்த நிலையில் சக்தி ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார் அதிர்ச்சி அடைந்த லதா தனது மருமகன் அற்புதராஜிடம் தகவல் கொடுக்கிறார் அற்புதராஜ் எதுவும் தெரியாதபோல் வீட்டில் வந்து நாடகம் ஆடியுள்ளார்.

பின்னர் சக்தியின் உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இது குறித்து லதா விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் விருத்தாசலம் போலீசார் சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் சக்தியின் வீட்டிற்கு சென்று அவர் இறந்த இடத்தை பார்வையிட்டனர் சக்தி தற்கொலை செய்து கொள்ள வில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது பின்னர் அவர் வீட்டில் அவரது தலைகாணியில் ரத்தக்கரை மற்றும் வளையல்கள் உடைந்து காணப்பட்டிருந்தன லதா காலையிலே வேலைக்கு சென்று விட்டார் ஆதலால் அற்புதராஜ் மற்றும் சக்தி இரண்டு பேர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

அற்புதராஜை போலீசார் விசாரணை செய்ததில் அற்புதராஜ் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார் அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அற்புதராஜை விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர் விசாரணையில் சக்தி ஏழு மாதம் கர்ப்பம் என்பதால் வளைகாப்பு நடத்த கோரி அற்புதராஜ்க்கும் சக்திக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது சக்தி தனக்கு வளையகாப்பு நடத்த வேண்டும் என்று இன்று அற்புதராஜை வற்புறுத்தி உள்ளார்.

அற்புதராஜ் எனக்கு எனது வீட்டில் எனக்கும் எனது அண்ணனுக்கும் கடன் தனியாக 4 லட்சம் பிரித்து கொடுத்து விட்டனர் அதனால் கடன் அதிகமாக இருக்கு ஆதலால் வளையகாப்பு நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.

சக்தி எனது பேரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு கடனை அடைத்து விட்டு நமக்கு என்று தனியாக வீடு கட்டிக் கொள்ளலாம் தற்போது எனக்கு வளைகாப்பு செய்யுமாறு கேட்டுள்ளார். நிலம் விற்பதற்கான ஏற்பாடுகளும் ஒரு வாரம் முன்பே சக்தி குடும்பத்தினர் செய்துள்ளார்கள்.

ஆனால் அற்புதராஜ் தற்போது வளைகாப்பு நடத்த முடியாது என்று தெள்ளத் தெளிவாக சக்தி இடம் கூறியதால் இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரம் அடைந்த அற்புதராஜ் அருகில் இருந்த ஜல்லிகரண்டியால் சக்தியை தலை,முகம், கால் என பல இடங்களில் சரமாரியாக தாக்கி சக்தியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

பின்னர் விருத்தாசலம் போலீசார் அற்புதராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 மாதம் கர்ப்பிணி காதல் மனைவியை காதல் கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment