Connect with us

சாவிலும் இணை பிரியாத தம்பதி!! வேலூரில் சோகம்!!

death 4

தமிழகம்

சாவிலும் இணை பிரியாத தம்பதி!! வேலூரில் சோகம்!!

வேலூரில் கணவன் இறந்த சோகத்தில் துக்கம் தாங்காமல் மனைவியும் மனைவியும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அடுத்த குடியாத்தம் பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி அஞ்சலி. இருவரும் இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில் கணவர் சேகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து அவரை அடக்கம் செய்யும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, கணவரின் உடல் அருகே அழுது கொண்டிருந்த அஞ்சலி மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருந்த தம்பதி இறப்பிலும் இருவரது உடல்கள் ஒரே வாகனத்தில் கொண்டுசென்றது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top