வாய்க்காலில் சடலமாக வந்த சிறுவனின் உடல்: அதிர்ச்சி சம்பவம்..!

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் மர்மமான முறையில் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் 6 வயது சிறுவனின் சடலம் மிதந்து கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவன் உயிருடன் இருப்பதாக நினைத்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் யார் என்பது குறித்தும் வாய்க்காலில் எப்படி வாழ்ந்தார்? என்பது குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.